₹2 கோடி வரி பாக்கியை கட்ட தவறினால் அபராதம் செயல் அலுவலர் உத்தரவு செங்கம் டவுன் பேரூராட்சியில்

செங்கம், மார்ச் 1: செங்கம் டவுன் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள ₹2 கோடி வரி பாக்கியை கட்ட தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று செயல் அலுவலர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். செங்கம் டவுன் பேரூராட்சியில் வாடகை பாக்கி, சொத்து வரி பாக்கி, குடிநீர் இணைப்பு கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட கட்டணங்கள் ₹2 கோடி நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக, செங்கம் டவுன் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் விடுத்துள்ள அறிக்கையில், ‘செங்கம் டவுன் பேரூராட்சி 18 வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள், வணிகர்கள் தங்களின் வரி பாக்கி, சொத்து வரி, தொழில் வரி மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகை பாக்கி என மொத்தம் ₹2 கோடி உள்ளது. அதனை குறித்த காலத்திற்குள் விரைந்து செலுத்த வேண்டும். தவறினால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: