வெறிச்சோடியது வேலூர் மீன் மார்க்கெட் உச்சத்துக்கு சென்ற மீன்கள் விலை

வேலூர்: வேலூரில் நேற்று மீன் மார்க்கெட் அசைவ பிரியவர்களின் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்பட்டது. வேலூர் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டுக்கு ஆடு, கோழி இறைச்சிகள் உள்ளூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வருகிறது. மீன்களை பொறுத்தவரை நாகை, மங்களூர், கொச்சி, கார்வார், கோவா போன்ற இடங்களில் இருந்து வருகிறது. வழக்கமாக 10 கன்டெய்னர் லாரிகளில் பல வகை மீன்கள் வருகின்றன. இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் விற்பனைக்காக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் அசைவ உணவை தவிர்க்கும் விசேஷ தினங்களில் வேலூர் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படும். அதன்படி நேற்று கிருத்திகை விரத தினம் என்பதாலும், கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதாலும் வேலூர் மீன் மார்க்கெட் வெறிச்சோடியது. இதனால் மீன்களின் வரத்தும் சரிந்து விலையும் உச்சத்தை எட்டியது. அதன்படி, ஒரு கிலோ வஞ்சிரம் ₹1,000க்கும், சங்கரா ₹300க்கும், இறால் ₹350 முதல் ₹450க்கும், கடல் நண்டு ₹300க்கும், ஜிலேபி ₹100க்கும், பாறை மீன் ₹300க்கும், விரால் ₹400க்கும் விற்பனையானது.கேப்சன் வேலூர் மீன் மார்க்கெட்டில் நேற்று மீன்கள் வாங்க குறைந்த அளவிலேயே அசைவபிரியர்கள் வந்திருந்தனர்.

Related Stories: