பில்லி சூனியம் வைத்ததாக பெரியம்மாவை கொலை செய்தவரின் தண்டனை ரத்து

கடலூர், பிப். 26:  பில்லி சூனியம் வைத்ததாக கூறி பெரியம்மாவை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆண் வாரிசு இருக்க கூடாது என்பதற்காக தனது குடும்பத்தினருக்கு பில்லி சூனியம் வைத்ததாக கூறி தனது பெரியம்மாவை கடந்த 2009ம் ஆண்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் நீதிமன்றம், சதீசுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சதீஷ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர். சதீஷ் தான் கொலை செய்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. நேரில் பார்த்ததாக கூறும் சாட்சிகளும் முன்னுக்குப் பின் முரணாக சாட்சியளித்துள்ளனர் என்று தீர்ப்பில் ெதரிவித்துள்ளனர்.

Related Stories: