(தி.மலை) ஆற்றில் களமிறங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி சமன் செய்தனர் செங்கம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க

செங்கம், பிப்.25: செங்கம் பகுதியில் ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்கும் விதமாக ஆற்றில் வருவாய் துறையினர் களமிறங்கி கொள்ளையர்கள் வருவதை தடுக்க ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி, மணல் குவியரை சமன் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் ஜவ்வாது மலை அடிவாரம் பகுதியிலிருந்து ஆறு உற்பத்தியாகி குப்பநத்தம் நீர் தேக்கம், அதனைத் தொடர்ந்து கொட்டாவூர், பரமனந்தல், வளையம் பட்டு, செங்கம், மண்மலை, நாச்சிப்பட்டு, கரியமங்கலம் ஆகிய பகுதியில் வழியாக ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு தொடர் மழையின் காரணமாகவும், குப்பநத்தம் அணையின் தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாகும் ஆற்றில் அதிக அளவில் மணல் குவியல் குவியலாக தற்போது காணப்படுகிறது. மேலும் தற்போது தண்ணீர் வறண்ட நிலையில் மணல் கொள்ளையர்களுக்கு சாதகமாக உள்ள நிலையில் ஆற்றுப்பகுதியில் குவிந்துள்ள மணலை ஜேசிபி இயந்திரம் மூலம் குவித்து டிப்பர் லாரிகளில் வாரி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இவை தொடர் கதையாகவும் உள்ளது.

இந்த மணல் கொள்ளையை தடுக்கும் விதமாக மண்மலை பகுதியில் தாசில்தார் முனுசாமி தலைமையில் வருவாய் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் குவியலை சமன்படுத்தியும், டிப்பர் லாரி ஜேசிபி வாகனங்கள் ஆற்றின் உட்பகுதியில் செல்லாதவாறு நேற்று ஆற்றில் பள்ளம் தோண்டி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பரமனந்தல் வளையம்பட்டு மண்மலை, நாச்சிப்பட்டு கரியமங்கலம் பகுதிகளில் சமுக விரோத கும்பல் மணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஆறறு மணலை திருட்டை தடுக்க வருவாய்த்துறையினர் இந்த பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: