சென்னையில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்ற 635 பேரின் வங்கி கணக்கு முடக்கம்: போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிகள், பொது இடங்களில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது ெசய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை சென்னை முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் திரிபுரா மற்றும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 46.58 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், ஒரு பைக், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரம், கடந்த ஒரு வாரத்தில் கைது ெசய்யப்பட்ட 30 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி முடக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை மொத்தம் கஞ்சா விற்பனை செய்ததாக 615 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,421 குற்றவாளிகள் கைது ெசய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்த கஞ்சா வியாபாரிகள் உட்பட 635 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகன் வங்கி கணக்குகள் முடக்குவதற்கான பணிகளில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: