உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா: தமிழறிஞர்கள் பங்கேற்பு

வேளச்சேரி: தரமணி, சி.பி.டி. வளாகத்தில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி   நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் இயக்குனர் முனைவர்  ந.அருள் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் வரவேற்றார். இதில், ‘மொழி வளத்திற்கு மொழி பெயர்ப்பின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு பேசினார்.

நிகழ்ச்சியில் முனைவர் பட்ட மாணவர்கள், ஒருங்கிணைந்த பட்ட மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆய்வியல் நிறைஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் முனைவர் நா.சுலோச்சனா நன்றி கூறினார்.

Related Stories: