‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை முன்னிட்டு மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் நாளை (2ம் தேதி) மற்றும் 9, 16, 23, 30 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. அதனையொட்டி லஸ் சர்ச் சாலையில் மேற்கண்ட நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கச்சேரி சாலையில் இருந்து லஸ் சர்ச் சாலை நோக்கி செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டு, அவை இடது புறமாக திரும்பி ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று ஆர்.கே.மடம் சாலை தெற்கு மாடவீதி சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி இலகுரக வாகனங்கள் வெங்கடேச அக்ரகாரம் சாலை வழியாக லஸ் அவென்யூ வழியாக சென்று இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை நேராக சென்று மந்தைவெளி மற்றும் வி.கே.அய்யர் ரோடு  காளியப்பா சந்திப்பு ஆர்.ஏ.புரம் இரண்டாவது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

* ராயப்பேட்டை நெடுஞ்சாலையிருந்து லஸ் சர்ச் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு இடது புறமாக திரும்பி ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று ஆர்.கே.மடம் சாலை கிழக்கு மாடவீதி சந்திப்பில் இருந்து இலகுரக வாகனங்கள் வெங்கடேச அக்ரகாரம் சாலை வழியாக டாக்டர் ரங்கா ரோடு வழியாக சென்று இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை நேராக சென்று மந்தவெளி மற்றும் வி.கே.ஐய்யர் ரோடு  காளியப்பா சந்திப்பு ஆர்.ஏ.புரம் இரண்டாவது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

* ஆர்.கே.மடம் சாலையில் இருந்து லஸ் சர்ச் சாலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டு அந்த வாகனங்கள் நேராக ராயப்பேட்டை நெடுஞ்சாலை சென்று டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.

* ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இருந்து ஆலிவர் சாலை வழியாக கற்பகாம்பாள் நகர் நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சர்ச் சாலை நாகேஷ்வர ராவ் பார்க் சந்திப்பில் இருந்து செல்ல தடை செய்யப்படுகிறது. அந்த வாகனங்கள் முசிறி சுப்பிரமணியம் சாலை வழியாக பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

Related Stories: