கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை: சிஎம்டிஏ அதிகாரி தகவல்

அண்ணாநகர்: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக சார்பில், சிறப்பு சந்தை அமைத்து தரப்படுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கவில்லை. இந்த ஆண்டு நோய் தொற்று குறைந்துள்ள நிலையில், ஆயுதபூஜைக்காக இன்று சிறப்பு சந்தை திறக்கப்படுகிறது. இதையொட்டி, பூஜைக்கு தேவையான பொரி, அவல், கடலை, சர்க்கரை, பழங்கள், வாழைமரங்கள், தோரணங்கள், இனிப்புகள் விற்பனை விறுவிறுப்பு அடைய தொடங்கியுள்ளது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்த சிறப்பு சந்தை இன்று முதல் அடுத்தமாதம் 9ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதன்படி, விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு சந்தை போடப்பட்டு எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வியாபாரிகள் அங்காடி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதுபோல் ஆயுத பூஜை முன்னிட்டு சிறப்பு சந்தை நாளை தொடங்கியுள்ள நிலையில், வியாபாரிகள் அங்காடி குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைக்கக்கூடாது’’ என்றார்.

Related Stories: