குரும்பூண்டி ஊராட்சியில் 100 சதவீதம் குடிநீர் விநியோகம்

கந்தர்வகோட்டை , செப். 30: குரும்பூண்டி ஊராட்சியில் அனைத்து பயனாளிகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், தமிழக அரசுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் குரும்பூண்டி ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஊராட்சி மூலம் குடிநீர் இணைப்பு வழங்கி 100% குடிநீர் பிரச்சனையை ஊராட்சி மன்ற தலைவர் தமிழக அரசின் உதவியுடன் நிறைவேற்றியுள்ளார். மேலும் சாலை வசதியை ஊராட்சி முழுவதும் சரி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து ஊர் முழுவதும் வீடுதோறும் மருத்துவத்துறை உடன் ஊராட்சி நிர்வாகம் சேர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது. இந்த ஆட்சியில் முறையாக ஊராட்சி நிர்வாகத்திற்கு போதிய நிதி வழங்குவதால் ஊராட்சி நிர்வாகம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

குரும்பூண்டி ஊராட்சி மக்களை விசாரித்த வகையில் தற்சமயம் தமிழக அரசு ஊராட்சி நிர்வாகம் சரிவர செயல்பட தமிழக அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்றும், இப்பகுதியில் சாலை வசதியும், குடிநீர் இணைப்புகள் , தெருவிளக்கு பிரச்சினையும் இல்லை எனவும் இதற்கு தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். மக்கள் போக்குவரத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள். மாதந்தோறும் முறையாக ஊராட்சி மன்ற உறுப்பினர் கூட்டம் ,கிராம சபை கூட்டம் எனவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சரியான முறையில் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறுகிறார்கள். இந்த ஊராட்சியில் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு உரிய முறையில் அனைத்து பொருட்களையும் தங்குதடையின்றி வழங்கி சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

இந்த ஊராட்சியில் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டு உள்ளார்கள் .தமிழக அரசு வேண்டுகோளுக்கு இணங்க ஊராட்சி நிர்வாகம் மரக்கன்றுகளை பராமரித்து வருவதாக தெரியவருகிறது. இந்த கிராமங்களில் உள்ள கருவேல மரங்களை அழித்து விட்டு நாட்டு மரங்களை நடவேண்டும் என அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க செயல்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஊராட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட தமிழக அரசு அனைத்து வகையிலும் உதவி செய்வதாகவும் இந்த ஊராட்சியில் குடிநீர் பிரச்னை நூறுசதவீதம் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கு தமிழக அரசுக்கு இந்த ஊராட்சி மக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் என்று கூறுகிறார்கள்.

Related Stories: