கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜேஸ்குமார் எம்.பி., தேர்வு

நாமக்கல், செப்.30: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஸ்குமார் எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாமக்கல்லில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஸ்குமார் எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட அவைத்தலைவராக மணிமாறன், மாவட்ட துணை செயலாளர்களாக பொன்னுசாமி எம்எல்ஏ, நலங்கிள்ளி, ராணிபெரியண்ணன், பொருளாளராக பாலசந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக டாக்டர்.மாயவன், பவித்திரம்கண்ணன், செல்வம், பொதுக்குழு உறுப்பினர்களாக சசிதரன், சரவணகுமார், கண்ணன், பூவராகவன், குணசேகரன், விமலா, காளியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

ராஜேஸ்குமார் எம்பி மீண்டும், மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாமக்கல்லில் திமுகவினர் நேற்று காலை பட்டாசுவெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில், நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர செயலாளர்கள் பூபதி, ராணா.ஆனந்த், சிவக்குமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறனுக்கு, கட்சியினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், தேவராஜன், விஸ்வநாதன், குட்டி (எ) செல்வகுமார், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சதீஸ், மாவட்ட பிரதிநிதிகள் ராஜவேல், அன்பரசு, பொருளாளர்கள் முரளி, அருள்செல்வன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், பால்ரவி, வடிவேல்குமார்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: