என்சிசி மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சிபுரம், செப். 29: காஞ்சிபுரத்தை அடுத்த பெரியார் நகரில் உள்ள பச்சையப்பன் கல்லூரி என்சிசி மாணவர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். என்சிசி மெட்ராஸ் குரூப் கேப்டன் அருணாச்சலம், கமாண்டிங் ஆபிசர் மஹரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான நிகோபார், என்சிசி மாணவர் படை இயக்குநரக துணை இயக்குநர் அதுல்குமார் ரஸ்தோகி  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்து, தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர், கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு என்சிசி மாணவர் படையை மேம்படுத்துவது குறித்தும், இந்திய ராணுவத்தில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்தும் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் டெல்லியில் என்சிசி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாடு இயக்குநரகத்தின் சார்பாக கலந்துகொண்ட பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர் ஜெயக்குமார் கௌரவிக்கப்பட்டார். என்சிசி பொறுப்பாளர்களான, பச்சையப்பன் ஆடவர் கல்லூரி செந்தில் தங்கராஜ், மகளிர் கல்லூரி உமா, பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி கோவிந்தராஜ், ஆதி பொறியியல் கல்லூரி சக்திவேல், சங்கரா கல்லூரி தெய்வசிகாமணி மற்றும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: