ராசிபுரம் ஜி.ஹெச்சுக்கு தேசிய தர உறுதிச்சான்றிதழ்

நாமக்கல், செப்.24:ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், கடந்த 12ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு, ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட தேசிய தர உறுதி சான்றிதழ் மற்றும் இலக்ஷ்யா சான்றிதழ்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட 13 துறைகளில் சிறப்பாக சேவை வழங்கியமைக்காக ஒன்றிய அரசின் தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை, கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் காட்டி மருத்துவ அலுவலர்கள் வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவ நல பணிகள்) ராஜ்மோகன், திருச்செங்கோடு தலைமை மருத்துவ அலுவலர் மோகனா பானு, ராசிபுரம் தலைமை மருத்துவ அலுவலர் ஜெயந்தி உட்பட மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: