பூலாங்கிணறு அரசுபள்ளியில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

உடுமலை,செப்.3:அந்தியூர் ஊராட்சி சார்பில், நம்ம ஊரு சூப்பரு என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பாலதுரை முன்னிலை வகித்தார். கணித ஆசிரியை அனிதா சுரேஷ் வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன், தூய்மைப் பணியும், மாணவர்கள் செயல்பாடும் என்ற தலைப்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரம் பேணுதல், நீர்மேலாண்மை குறித்து பல்வேறு கருத்துகளை மாணவர்களுக்கு விளக்கினார். ஊராட்சி செயலர் கோகிலவாணி வாழ்த்தி  பேசினார். பணித்தள பொறுப்பாளர் எம்.எம்.சுதா நூறுநாள் வேலைத்திட்ட ஆட்களை கொண்டு பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினார். மக்கள் நலப்பணியாளர் சாந்தாமணி, தூய்மைப்பணியாளர்கள் சக்கரம்மாள், மீனா ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories: