கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 4,120 பேர் விண்ணப்பம்

 

திருப்பூர், மே 24: திருப்பூர் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 4,120 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் சுயநிதி பள்ளிகள் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி மற்றும் 1ம் வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியது.

இந்த மாதம் 20ம் தேதியுடன் முடிவடைந்தது. மாவட்டத்தில் உள்ள 281 பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பில் மொத்தம் 3330 இடங்கள் உள்ளன.இதில் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை விரைவில் நடக்க உள்ளது. இதற்காக, மாவட்டத்தில் 8 தாலுகாவில் இருந்தும் 4 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. போதிய ஆவணங்கள் இல்லாததால் 369 விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 130 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 120 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) ஆனந்தி கூறினார்.

The post கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 4,120 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: