திருப்பாலைக்குடியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

ஆர்.எஸ் மங்கலம் செப் 3: ஆர்.எஸ் மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் பணம் வைத்து சீட்டு விளையாடு சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 5 நபர்களை திருப்பாலைக்குடி போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பாலைக்குடி பகுதியில் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம் இந்நிலையில் ரோந்து சுற்றி வரும்போது திருப்பாலைக்குடி பெட்ரோல் பங்க் பாலத்தின் அருகில் உள்ள காட்டு கருவேல மரக்காட்டில் ஏதோ ஆட்கள் சப்தம் கேட்டுள்ளது. உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கி சென்று பார்த்த பொழுது திருப்பாலைக்குடியைச் சேர்ந்த தர்மர் (35) நாகனங்களைச் சேர்ந்த காந்தி மகன் நாகநாதன் (50), கிழக்குத் தெருவை சேர்ந்த இப்ராஹிம் மகன் அப்பாஸ் (32). திருப்பாலைக்குடி காவல் நிலைய துப்புரவு பணியாளர் சங்கர் (51) மற்றும் கிழக்குத் தெருவை சேர்ந்த ஷேக் தாவுத் மகன் காதர் (35) ஆகியோர்கள் சம்பவ இடத்தில் சீட்டுக்கட்டை வைத்துக்கொண்டு உள்ளே வெளியே என சத்தம் போட்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளார்கள்.போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் பிடித்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக்கள் 52 மற்றும் சூதாடிய பணம் ரூபாய் 8800 ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சரவணன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Stories: