போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.சீபாஸ் கல்யாணன் தலைமையில் போதை வேண்டாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு உறுதி மொழியை மாணவ மாணவிகள் ஏற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பள்ளி வளாகம் முன்பு மற்றும் பள்ளி வளாகத்தில் போதை பொருட்கள் பயன்படுத்தினாலோ அல்லது பள்ளி வெளிப்புறத்தில் விற்றாலோ உடனடியாக 6379904848 என்ற நம்பருக்கு தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி  செபாஸ் கல்யாண் தெரிவித்தார்.

Related Stories: