பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள காட்டில் வாலிபர் ஒருவர் இறந்துகிடப்பதாக ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவை சேர்ந்த பிரசாந்த் (30) என்பதும், இவர் ஒரகடம் அருகே வல்லம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரண்டு மாதமாக வேலை செய்து வந்துள்ளார்.

இவர் இதற்கு முன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், ரூ. 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் வல்லம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த தொழிற்சாலையில் குறைந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், தனது சகோதரனுக்கு சாக போகிறேன் என்று எஸ்எம்எஸ்., அனுப்பி வைத்துவிட்டு பூச்சி மருந்து குடித்துள்ளார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: