கோயில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள்

ஊட்டி, ஜூலை 30:  ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தவை ஆகும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் காரியம் செய்யவும், விரதம் இருக்கவும் ஏற்ற நாளாகவும் உள்ளன. இது தவிர, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஊட்டி நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதனால் மாரியம்மன் கோயிலில் கூட்டம் அலைமோதியது. மேலும், புதிதாக வாகனங்கள் வாங்கியவர்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றை கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதேபோல், ஊட்டி மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பல இடங்களில் முன்னோர்கள் நினைவாக பொதுமக்கள் காரியங்கள் செய்தனர்.

Related Stories: