பெரம்பலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

பெரம்பலூர்,ஜூன்.11: பெரம்பலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 9 பவு ன் தாலிச் செயினை பறித் து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பெரம்பலூர் கலெக்டர் அலு வலக சாலையில் அபிராம புரத்தில், வசித்து வருபவர் கிருஷ்ணசாமி(49). அசூர் அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவர் தனது வீட்டின் மேல் மாடியில் குடியிருந்து கொண்டு, தரை தளத்தை வேப்பந்த ட்டை தாலுக்கா, வாலிகண் டபுரம் ஊராட்சி தம்பை கிராமத்தைச் சேர்ந்த சாமி துரை (48) என்பவருக்கு வாடகையில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்துள்ளார். சாமிதுரை பெரம்பலூர் மாவ ட்டம், குன்னம் தாலுக்கா, அகரம் சீகூர் கிராமத்திலு ள்ள கனரா வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா(36). இவர்களு க்கு ஹரிணி(14), ஹரிகரன் (14) ஆகிய இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.சங்கீதாவின் பிள்ளைகள் இருவரும் திருவிழாவிற்காக தம்பைக்கு சென்று விட்டார்கள். இந்நிலையில் நேற்று(10ம் தேதி) இரவு 7.15 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் துணிகளை அயன் பண்ணிக் கொண் டிருந்தார். அப்போது வீட் டின் மின்சார மெயின் சுவி ட்சை ஆப் செய்துவிட்டு அடையாளம் தெரியாத மர் ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்துமறைந்து நின்று கொண்டிருந்துள்ளார்.சங்கீதா திடீரென கரென்ட் கட்டாகிவிட்டதால் வீட்டுக்கு வெளியே வந்தபோது பின் னாலிருந்து சங்கீதா கழுத் தில் அணிந்திருந்த 7பவுன் தாலிக்கொடி, 2பவுன் தாலி என மொத்தம் 9 பவுன் தா லிக் கொடியை மர்மநபர் பறித்துவிட்டு வெளியே செ ன்று, தான் வந்த ஸ்கூட்டி யில் தப்பிச்செல்ல முயன் றுள்ளார். வீட்டுக்குள் இரு ந்து சத்தம் போட்டபடி கொ ள்ளையனுடன் போராடிய சங்கீதா, கைகளில் வெறும் 2பவுன் எடைகொண்ட தா லி மட்டுமே சிக்கியது. கொ ள்ளையன் கைகளில் 7பவு ன் தாலிக்கொடி பறிபோன து. அப்போது சங்கீதா தங் கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணசாமி (49)என்பவர் சங்கீதாவின் அலறல் சத்தம்கேட்டு ஓடி வந்து வண்டியை பிடித்து கீழே தள்ளி வண்டியின் சாவியை பறித்துக் கொண் டதால்கொள்ளையன் தான் வந்த ஸ்கூட்டியை அங்கே யே விட்டுவிட்டு ஓடிவிட்டா ர். சுமார் 2பவுன் தாலி கொ டியை சங்கீதா கையிலேயே பிடித்துக் கொண்டுள்ளார்.சங்கீதாவுக்கு காயம் ஏது வும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்துத் தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் நே ரில் வந்து விசாரணை செ ய்தனர். போலீசாரின் மோப் ப நாய் வரவழைக்கப் பட்டு கொள்ளையர் தப்பிச் சென் ற வழிகளைக் கண்ட றிந்த னர். கை ரேகை நிபு ணர் கள் கொள்ளையரின் ஸ்கூ ட்டி மீதுள்ள கைரேகை க ளை சேகரித்துச் சென்ற னர். கலெக்டர் அலுவலக சாலையில் வீடுபுகுந்து நட ந்த கொள்ளை சம்பவத்தா ல் நகர மக்கள் மிகுந்த அச் சத்தில் உள்ளனர்.

Related Stories: