மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருப்பூர், ஜூன் 9: விழுப்புரம் மாவட்டம் கொங்கராயனூர் சேர்ந்தவர் வினோத் (28). இவர் தனது மனைவி சாந்தா, மகன், மகளுடன் திருப்பூர் எம்எஸ் நகரை அடுத்த செல்வராஜ் நகரில் வசித்து வந்தார். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று வினோத் வீட்டில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதாக சுவிட்ச் போர்டில் இருந்து தனியாக வயரை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் வினோத் தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு அவருடைய மனைவி சாந்தா காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர் அவர்களை பரிசோதித்துவிட்டு வினோத் ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்தார். காயமடைந்த சாந்தா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: