சாலமூர் கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

ஊட்டி, மே 28: கேத்தி பாலாடா சாலமூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து, கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி அருகேயுள்ள கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட சாலமூர் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில்  சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையோரங்களில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: