முதலாவது மண்டல அலுவலகத்தில் மேயர் ஆய்வு

திருப்பூர், மே 19: திருப்பூர்  மாநகராட்சிக்கு உட்பட்டு 60 வார்டுகள் உள்ளது. இதனை 4 மண்டலமாக  பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வடக்கு பகுதியில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்  திடீரென முதலாவது மண்டல அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது  மண்டலத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள குப்பை லாரிகள் மற்றும் பேட்டரி  வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும்,  பழுதாகி கிடக்கும் வாகனங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார். பின்னர்  அங்குள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த மேயர் அங்கு வழங்கப்படும் உணவு  வகைகள் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் உணவு வகைகளை அவர்  சாப்பிட்டு பார்த்தார். இதைத்தொடர்ந்து 1-வது மண்டலத்திற்குட்பட்ட  பகுதிகளுக்கான குடிநீர் வினியோகம் குறித்து அதிகாரிகள் மற்றும்  கவுன்சிலர்களுடன் மேயர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது 1-வது மண்டல  தலைவர் உமாமகேஸ்வரி, உதவி கமிஷனர் சுப்பிரமணியம், திமுக 15 வேலம்பாளையம்  பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் சிட்டி  வெங்கடாசலம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ் மற்றும் தொடர்புடைய  அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: