லாரி மோதி மேஸ்திரி பலி

கிருஷ்ணகிரி, மே 14: கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுப்பிரமணி (41). இவர் கடந்த 11ம் தேதி கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிட்டம்பட்டி என்ற இடத்தில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி டூவீலர் மீது மோதியதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: