வேளச்சேரி மயானம் மூடல்

சென்னை: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 172வது கோட்டத்திற்கு உட்பட்ட வேளச்சேரி இந்து மயான பூமியின் எரிவாயு தகன மேடை சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்யப்படுவதுடன், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  இன்று முதல் வருகிற ஜூலை 31ம் தேதி வரை மூடப்படுகிறது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு 163க்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயான பூமி மற்றும் வார்டு 177க்கு உட்பட்ட தரமணி வேளச்சேரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள பாரதி நகர் மயான பூமியினை பயன்படுத்திக் கொள்ளலாம், என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories: