போலீசாரின் மேல்முறையீடு, கருணை மனு மீது நடவடிக்கை காவலர்களுக்கெல்லாம் காவலராக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின்; ராஜேந்திரன் எம்எல்ஏ புகழாரம்

சேலம், மே 11:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்களுக்கெல்லாம் காவலராக திகழுந்து வருவதாக, சட்டமன்றத்தில் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் புகழாரம் சூட்டினார். தமிழக சட்டமன்றத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை மானியக் கோரிக்கையின் போது, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான ராஜேந்திரன் பேசியதாவது: தமிழக முதல்வர், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, தமிழகத்தை அமைதி பூங்காவாக திகழச்செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் காவல்துறை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கான மாநாட்டில் பேசிய முதல்வர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு சட்டம்-ஒழுங்கு மிக முக்கியமானது என கூறியுள்ளார். மேலும், குற்றங்களே நடக்காத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

பொதுமக்களுக்கு, காவலர்கள் காவலாக இருக்கின்றனர். அந்த காவலர்களுக்கெல்லாம் காவலராக நம்முடைய முதல்வர் திகழ்வதாக, காவலர்களே போற்றுகின்றனர். காவலர்களின் மேல்முறையீடு மனு, கருணை மனு ஆகியவற்றையெல்லாம் பரிசீலிக்க உத்தரவிட்டு, 1,311 காவலர்களின் வயிற்றில் பால்வார்த்தவர் நம்முடைய முதல்வர். காவல்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் படிந்துள்ள கறைகளை போக்கும் வகையிலும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து, சிறப்பாக பணியாற்றிட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வம் தலைமையில், 4வது காவல் ஆணையத்தை அமைத்துள்ளதை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர். இவ்வாறு ராஜேந்திரன் எம்எல்ஏ பேசினார்.

Related Stories: