வார்டுகளில் குப்பை அகற்ற வாகன வசதி வேண்டும் மத்திய மண்டல தலைவர் வேண்டுகோள்

கோவை, ஏப். 23: கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் அன்றாடம் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. காரணம், மாநகராட்சிக்கு சொந்தமான லாரிகள் மற்றும் ஆட்டோக்கள் ``பிட்னஸ் சான்றிதழ்’’ (எப்.சி.) பெற சென்றுவிட்டன. பல மாதங்கள் ஆகியும் இவை மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால், குப்பை அகற்றும் பணியில் இழுபறி நீடிக்கிறது. அனைத்து வார்டுகளில் குப்பைகள் தேங்குவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பல்வேறு விதமான நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, ``பிட்னஸ் சான்றிதழ்’’ (எப்.சி.) பெற சென்ற அனைத்து வாகனங்களையும் மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டுகிறேன். வார்டுகளில் அன்றாடம் குப்பை அகற்றும் பணியில் தொய்வு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: