சிவகங்கை புத்தக திருவிழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

சிவகங்கை, ஏப். 22: சிவகங்கை புத்தக திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையிலும், அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்வதற்காகவும், புத்தக வாசிப்பு திறன்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் பல்வேறு போட்டிகள் ஏப்.15 முதல் நடத்தப்பட்டு வருகிறது.

 மாறுவேட போட்டி, கட்டுரை போட்டி, கைகளால் பனை ஓலைகளில் செய்யும் கைவினை பொருட்கள் போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி போன்ற 51 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

மாணவ, மாணவிகளுக்கு கோளரங்கம், குறும்படங்கள் திரையிடல் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டு வருகின்றன.  வாசிப்பு திறனை மேம்படுத்த தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. புத்தக திருவிழாவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். எம்பி கார்த்தி சிதம்பரம் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் எஸ்பி செந்தில்குமார், ஆர்டிஓ முத்துக்கழுவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், சிவகங்கை நகர்மன்ற துணை தலைவர் கார்கண்ணன், நகர் மன்ற உறுப்பினர் சேதுநாச்சியார் வீரக்காளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: