உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை

காங்கயம், ஏப். 21: காங்கயம் மற்றும் நத்தக்காடையூர் பகுதியில் உள்ள உரம் மற்றும் பூச்சிமருந்து கடைகளில் விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு உரம் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநர் ரவி, சமுக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் புனிதவதி, வேளாண்மை அலுவலர் பானுப்பிரியா, தோட்டக்கலை அலுவலர் சுபாஷினி ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது கடைகாரர்களிடம், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சிமருந்து பரிந்துரைக்கும்போது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பரிந்துறைக்கப்பட்ட மருந்துகள், அளவுகளை பின்பற்ற வேண்டும்.

உர விற்பனையாளர்கள், விவசாயிகளை கூடுதலாக வேறு உரங்களை வாங்க நிர்பந்திக்கக்கூடாது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, வாங்கிய உரங்களுக்கு பில் வழங்காமல் விட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். முன்னதாக உரம் இருப்பு மற்றும் விலைப்பட்டியலை பலகையில் எழுதி கடைக்கு முன் வைக்கப்பட்டுள்ளதா? என பார்க்கப்பட்டது. உர இருப்பு பதிவேட்டில் உள்ள இருப்பு விபரம் பொருள் இருப்புடன் சரிபார்த்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: