சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா

சேலம், ஏப்.7:  சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் காவடி பழனியாண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 3ம் தேதி முதல் பல்வேறு விதமான ஹோமம், பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 3 மணி முதல் ருத்ரம், வேத திருமுறை பாராயணம் நடந்தது. மேலும் ஆறு கால யாக பூஜை,  200 வேத விற்பன்னர்கள், பக்தர்கள் கலந்து கொண்ட 164 யாக சாலை பூர்ணாஹூதி நடந்தது. காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் ராஜகோபுரத்தின் சகல விமானங்களுக்கும்  கும்பாபிஷேகம் நடந்தது. காலை 7.15 மணிக்கு காவடி பழனியாண்டவர் மற்றும் சகல தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், காவடி பழனியாண்டவருக்கு ஸ்வர்ண முருகன் அலங்காரம், தங்கக்கவசம் சாத்துபடி நடந்தது.

காலை 11 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத காவடி பழனியாண்டவருக்கு திருக்கல்யாணம், தாம்பூலம், அன்னதானம் நடந்தது. இரவு 7 மணிக்கு தங்கரதம் புறப்பாடு நடந்தது. இந்த கும்பாபிஷேக காண சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: