வேர்க்கடலை விதைப் பண்ணையில் தரமான விதைகள் உற்பத்தி வழிகாட்டுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வேர்க்கடலை விதைப்பண்ணையில் தரமான விதைகள் உற்பத்தி குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. வேர்க்கடலை விதைப் பண்ணையில் அறுவடைக்கு பின்னர் தரமான விதைகளை பெறுவது குறித்து திருவள்ளூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் என்.ஜீவராணி, திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடியில் வழிகாட்டுதல்களை வழங்கினார். அப்போது அவர், வேர்க்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் அறுவடையின்போது விதைகளில் பிற ரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். அறுவடையாகும் விதைகளை புதிய கோணிப்பபைகளில் சேர்க்க வேண்டும். பழைய ஈரமான கோணிப்பைகளை பயன்படுத்தக் கூடாது.

அறுவடையான விதைகளை உடனடியாக காயவைத்து குறைந்த ஈரப்பத நிலைக்கு கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால், மணிலா விதைகளில் பூஞ்சான் வளர்ச்சி ஏற்பட்டு விதைகளின் நிறம் மாறி, கசப்பு தன்மை ஏற்பட்டு முளைப்பு திறன் பாதிக்கப்படும். உலர் களத்தை நன்கு சுத்தப்படுத்திய பின்பு விதைகளை களத்தில் பரப்பி மிதமான வெயிலில் காயவைத்து அடிக்கடி கிளறிவிட்டு படிப்படியாக ஈரப்பதத்தை குறைப்பதால் விதைகளின் முளைப்பு திறன் அதிகரிக்கும். பிறரக கலப்பு, கல், மண் தூசியின்றி சுத்தமான விதைகளை இதன்மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யலாம் என்றார்.

Related Stories: