(தி.மலை) 180 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி சிறப்பு மனுநீதி நாள் முகாமில்

தண்டராம்பட்டு, மார்ச் 25: தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் கடந்த மாதம் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 314 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை செய்ததில் 180 மனுக்கள் ஏற்கப்பட்டது. 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 84 மனுக்கள் மறுபரிசீலனையில் உள்ளது. இந்நிலையில். நேற்று முன்தினம் அங்காள பரமேஸ்வரி கோயில் முன் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமில் டிஆர்ஓ பிரியதர்ஷினி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது தாசில்தார் பரிமளா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா, ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமார், துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, விஏஓக்கள் சிவலிங்கம், வெங்கடேசன், ஏழுமலை, வெங்கடாசலம், சிவலிங்கம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: