(தி.மலை) புதர்கள் மண்டி கிடந்த பள்ளி மைதானம் சீரமைப்பு பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

கண்ணமங்கலம், மார்ச் 25: கண்ணமங்கலம் மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முள்செடி, கொடிகள் வளர்ந்து காடாக காட்சியளித்தது. இதனால் இதில் பாம்பு, தேள் உள்ளிட்டவை காணப்பட்டன. இவை வளாகத்தில் உள்ள மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை, பள்ளி முன்பகுதிகளில் வந்ததால் மாணவிகள் அச்சப்பட்டு வந்தனர். இதுகுறித்து கடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் போது பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சமி கோவர்த்தனன் 3 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பள்ளி வெளி மைதானம் முழுவதும் உள்ள புதர்களை அகற்ற ஏற்பாடு செய்தார். பின்னர், மாணவிகளுக்கான கழிவறை, சமையல் கூடம், அருகில் உள்ள அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்தார். தொடர்ந்து ஆண்கள் அரசு மேல்நலைப்பள்ளியில் 20 வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்த 2 ஆழ்துளை பம்புகளை பேரூராட்சி பணியாளர்களை கொண்டு சீரமைத்தார். அப்போது துணைத்தலைவர் குமார், தலைமையாசிரியர்கள் மகாலட்சுமிமுத்துவேல், கருணாநிதி, நகர செயலாளர் கோவர்த்தனன் பெற்றோர் ஆசிரியர் உறுப்பினர்கள் தீபா, முத்துவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: