(தி.மலை) உலக மறுசுழற்சி தின விழிப்புணர்வு வசூர் ஊராட்சி பள்ளியில்

போளூர், மார்ச் 25: போளூர் அடுத்த வசூர் ஊராட்சி நடுநிலை பள்ளியில் உலக மறுசுழற்சி தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மறு சுழற்சி செய்யும் முறையையும், அதன் பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்கப்பட்டது. மேலும் இதன் மூலம் சுற்றுச்சூழலை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதனையும் எடுத்து கூறப்பட்டது. இதையடுத்து மறு சுழற்சியே மனிதனின் மறுமலர்ச்சி என்று மாணவர்கள் கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், தனியார் வேளாண்மை கல்லுரி மாணவிகள் கு.மம்தாகுமார், பா.பார்கவி, ப.அனுஷா, சி.சங்கவி, ச.ரோஜாபவதாரினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: