அரசு ஐடிஐயில் குறுகிய காலப்பயிற்சி

சிவகங்கை, மார்ச் 19: ஐடிஐ முதல்வர் அசோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேசிய கல்வி கொள்கையின்படி, காரைக்குடி அமராவதிபுதூர் அரசு ஐடிஐக்கு குறுகிய காலப்பயிற்சி மையமாக மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதையடுத்து இம்மையத்தில் பற்ற வைப்பவர் (மேனுவல் மற்றும் சீல்டேடு மெட்டல் ஆர்க் வெல்டிங்), மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல் (எலக்ட்ரீசியன்) ஆகிய தொழிற் பிரிவுகளில் குறுகிய காலப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதில் சேருவதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 14 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற இளைஞர்கள் இப்பயிற்சியில் சேரலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். சேர விரும்புவோர் காரைக்குடி அமராவதி புதூர் அரசு ஐடிஐல் தொடர்பு கொள்ளலாம். மேலும் 6374045704, 9150611756, 9489488648, 9787199214, 9677067616 ஆகிய எண்களில் கூடுதல் தகவல் அறியலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: