பனைக்குளத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம், மார்ச் 17: ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை, பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் பனைக்குளம் கிராமத்தில் நடந்தது. இதில் மாடு, ஆடு, கோழிகளுக்கு தடுப்பூசி, மாடுகளுக்கு சினை பரிசோதனை, செயற்கை கருவூட்டல், குடல் புழு நீக்கம், பொது மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வாலாந்தரவை கால்நடை உதவி மருத்துவர் முஹமது நிஜாம் தலைமையில் 200 மாடுகள், 400 ஆடுகள், 600 கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை தலைவர் சிராஜ்தீன், பொருளாளர் முஹமது இக்பால், உப தலைவர் ரோஸ் சுல்தான், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் அம்ஜத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது, புதுவலசை தர்ம பரிபாலன சபை உபதலைவர் முஹமது களஞ்சியம், பனைக்குளம் முஸ்லிம் லீக் நகர் தலைவர் முஹமது இக்பால், தமுமுக மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா, வாலிப முஸ்லிம் சங்கத் தலைவர் ஹாஜா முகைதீன் கலந்து கொண்டனர். தணிக்கையாளர் நூருல் ஹசன் நன்றி கூறினார்.

Related Stories: