திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர், பிப்.17: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த மருத்துவமனையில் துப்புரவு பணி மற்றும் பாதுகாவலர் பணிக்காக தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஒப்பந்த முறையில் 140க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்து வரும் ஜோசப்ராஜ் இந்த தொழிலாளர்களுக்கு எதிரான விரோத போக்கில் ஈடுப்பட்டு வருவதாகவும், சமூக ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மேற்படி முதல்வரை கண்டித்தும் மற்றும் பணி நிரந்தரம் கூலி உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மருத்துவமனையில் 2 மணி நேரம் வரையில் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: