தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆணையர் தேனியில் ஆய்வு

தேனி: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மேல்முறையீட்டு மனுக்களின் நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமை வகித்தார். கலெக்டர் முரளீதரன் முன்னிலை வகித்தார். ஆய்வின்போது தகவல் ஆணையர் பிரதாப்குமார் கூறியதாவது: பொதுமக்கள் அரசிடமிருந்து தேவையான தகவல்களை பெறுவதற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அரசுத்துறை அலுவலர்கள், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தனிக்கவனம் செலுத்தி உரிய காலத்திற்குள் எவ்வித புகாருக்கும், அபராதம் ஏதும் செலுத்திடாத வகையில் பணியாற்றிட வேண்டும். தேனி மாவட்டத்தில் 10 மனுக்கள் திண்டுக்கல் மாவட்டத்தில்-11, மதுரை மாவட்டத்தில்-19, விருதுநகர் மாவட்டத்தில்-10 என மொத்தம் 50 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 42 மனுக்களுக்கு உரிய விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 8 மனுக்களுக்கு உரிய மனுதாரர்களுக்கு தகவல்களை உரிய காலத்திற்குள் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.  ஆய்வின்போது, தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் மனு அளித்த மனுதாரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: