மருத்துவ வகுப்பினருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி: முடித்திருத்துவோர் நல சங்கம் கோரிக்கை

காஞ்சிபுரம்: தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்க மாவட்ட பொதுக்குழு, செயற்குழு மற்றும் முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஜி.எஸ்.சேகர் வரவேற்றார். மாவட்ட சிறப்புத் தலைவர் ராஜா, பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில துணை செயலாளர் ஜி.கே.தட்சிணாமூர்த்தி, மாநில துணை தலைவர் என்.ராஜா, மாநில இளைஞரணி அமைப்பாளர் கதிர் ஆகியோர்  கலந்து கொண்டு சங்க கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

இதில் தாம்பரம் தேசிய சித்த நிறுவனத்தில் மருத்துவ வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முடிதிருத்தும் சமுதாயத்துக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். தமிழ்நாடு ஐடிஐக்களில் கலை அழகு சான்றிதழ் படிப்பு தொடங்க வேண்டும், ஏனாத்தூர் மற்றும் கீழ்கதிர்பூர் பகுதியில் வழங்கப்பட்டுள்ள வீட்டு மனையில் இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் பசுமை வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முடிதிருத்தும் சமூகத்துக்கு காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். ஒடிசா, ஆந்திரா உள்பட மற்ற மாநிலங்களில் மருத்துவ வகுப்பினருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி அளிக்கப்படுவதுபோல தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: