கல்லூரி மாணவரை கொலை செய்த வழக்கில் இருவர் குண்டாசில் கைது

ஓசூர், ஜன.9: ஓசூர் வள்ளுவர் நகர் பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கல்லால் அடித்து கடந்த அக்டோபர் 28ம் தேதி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோதுட்டூர் பகுதியை சேர்ந்த ஷேக் முகமது அப்சல் (21) என்பதும், இவர் ஓசூர் ராம்நகரில் உள்ள அவரது மாமா வீட்டில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து கொண்டே ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிவசக்தி நகரைச் சேர்ந்த ராஜேஷ் (24), திலீப்குமார் (21) ஆகிய இருவரை கைது செய்தனர். இருவர் மீதும் ஓசூர் நகர போலீஸ் ஸ்டேஷன் மற்றும் உத்தனப்பள்ளி போலீஸ் ஸ்டேசன்களில் வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

Related Stories: