தேனி நகரில் கொரோனா பாதிப்பு 11 ஆனது

தேனி: தேனி நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்த நிலையில், தேனிநகர் மிராண்டா லைனில் 5 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் மரத்தாலான தடை ஏற்படுத்தப்பட்டது. கொரோனா 3வது அலை நாடு முழுவதும் பரவத் தொடங்கி உள்ளது. இதுமட்டுமல்லாமல் உருமாறிய ஒமிக்ரான் பரவலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, நேற்று முதல் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி நகரில் மட்டும் நேற்று வரை 11 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு தேனி அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தேனி நகர் 15 வது வார்டில் மிராண்டா லைனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும், இவர்களது வீட்டினருகே உள்ள 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேனி நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு முன்பாக தடை செய்யப்பட்ட பகுதியை குறிக்கும் சவுக்கு மர கம்புகளாலான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Related Stories: