கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு

வேதாரண்யம், டிச.28: கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் 24 சது கிலோமீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணலாயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் மான், நரி, குரங்கு, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வனவிலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீரும், உணவும் கிடைக்கிறது. தற்போது இங்குள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளி மான்கள், வெளிமான்கள் நன்றாக செழிப்புடன் உள்ளன.

இந்நிலையில் நேற்று திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் உயிரின காப்பாளர் யோகேஸ்குமார் மீனா ஆகியோர் பறவைகள் சரணாலயம், கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம், கடல்ஆமை பொறிப்பகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் ஆறுகாட்டுதுரை, கோடியக்கரை கடற்பகுதியினையும், பறவைகள் சரணலாயத்தையும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கோடிக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், வனவர் சதீஷ்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் லோகநாதன், சுதாகர், மற்றும் வனக்காப்பாளர் கலைநேசன் உடனிருந்தனர்.

Related Stories: