ஆரணியில் நடந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு சிஇஓ திடீர் ஆய்வு

ஆரணி, டிச.23: ஆரணி, மேற்கு ஆரணி வட்டாரங்களில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு ஆரணி வட்டார வளமையத்தில் ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களான ஏழுமலை, அரிகிருஷ்ணன், இன்பராஜ், வடிவேலன், சீனிவாசன், சாந்திஇளமதி ஆகியோர் தலைமையில் கிராமப்புறங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்துவது குறித்து ஆரணி வட்டார வளமையத்தில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் நேற்று திடீர் ஆய்வு செய்தார். தன்னார்வலர்களுக்கு எவ்வாறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, திட்டத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் ேபசியதாவது: கொரோனா ஊரடங்கு காரணமாக 1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களின் கற்றல் இடைவெளி, விடுபட்ட வகுப்புகளின் பாடங்களின் கற்றல் இழப்புகளை ஈடு செய்யும் நோக்கத்தில், தினமும் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை கிராமப்புறங்களில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்கள். திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

அதேபோல், பாடம் எடுக்கும்போது, மாணவர்களுக்கு எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்டம் முழுவதும் ஆரணி உள்பட 561 தன்னார்வலர்களுக்கு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக, ஆய்வின்போது, பள்ளி துணை ஆய்வாளர் பாபு, வட்டார கல்வி அலுவலர் உதயகுமார், வட்டாரவள மேற்பார்வையாளர்கள் ஜெயசீலி, பாவை உட்பட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: