ராஜபாளையம் கணபதிபுரம் பகுதியில் சேதமடைந்த ரயில்வே அடிப்பாலம் சாலை சீரமைப்பு பணிகளை எம்எல்ஏ ஆய்வு

ராஜபாளையம், டிச. 13: ராஜபாளையம் நகரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், மாற்றுப்பாதையாக மலையடிப்பட்டி சாலை உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பீமராஜா சாலை வழியாக, தற்காலிகமாக குறுக்குவழிச் சாலையான கணதியாபுரம் தெரு ரயில்வே அடிப்பாலம் வழியாக சத்திரப்பட்டி சாலை சென்று வந்தனர். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, இந்த பாதை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் உட்பட அனைத்து தரப்பட்ட மக்களும், அச்சாலையில் பயணிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர்.

அச்சாலையை சீரமைக்க ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், எம்எல்ஏ அப்பகுதியில் பார்வையிட்டு மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தினார். அதை தொடர்ந்து, தற்போது கணபதியாபுரம் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் (தெற்கு) ராமமூர்த்தி, பாஸ்கர், ராதாகிருஷ்ணராஜா, செல்வக்கனி மற்றும் கழக நிர்வாகிகள், ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: