பூ வியாபாரியிடம் பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

முசிறி, டிச.7: சமயபுரம் கடைவீதியில் பூக்கடை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சமயபுரம் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாபு(41). இவர் சமயபுரம் கடைவீதியில் பூக்கடை வைத்துள்ளார். நேற்று இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,700 மற்றும் செல்போன் ஆகியவற்றை லால்குடி அருகே உள்ள சிறுமருதூரை சேர்ந்த மணிகண்டன்(29) பறித்துள்ளார். இது குறித்து பாபு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

Related Stories:

More