பட்டுக்கோட்டை கைலாசநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

பட்டுக்கோட்டை, டிச.7: பட்டுக்கோட்டையில் கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு பூமல்லியார்குளம் கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதருக்கு நேற்று மாலை 108 சங்காபிஷேகம் நடந்தது. இந்த சங்காபிஷேகம் மிகவும் சிறப்பாக நாகநாதர் வடிவில் 108 சங்குகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. சங்காபிஷேகத்தை முன்னிட்டு கைலாசநாதருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கைலாசநாதருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கைலாசநாதருக்கும், மங்களாம்பிகைக்கும் பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாகநாதர் வடிவில் அமைக்கப்பட்ட 108 சங்காபிஷேகத்தை கண்டு  கைலாசநாதரை வழிபட்டு சென்றனர். அதேபோல் காசாங்குளம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலிலும், அதேபோல் கோட்டை சந்திரசேகர சுவாமி கோயிலிலும் நேற்று மாலை 108 சங்காபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்காபிஷேகத்தை கண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Related Stories: