கஞ்சா விற்ற தொழிலாளி கைது

திருப்பூர், டிச. 6:  திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கே.வி.ஆர் நகர், கள்ளிக்காடு தோட்டம் விநாயகர் கோவில் பின்புறமாக கூலி தொழிலாளி சரவணன் (51) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்து 1100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More