கலெக்டர் அனீஷ்சேகர் தகவல் ஒன்வே கால்டாக்சி சேவைக்கு தடைகோரி டாக்சி டிரைவர்கள் போராட்டம்

மதுரை, டிச. 4: ஒன் வே கால் டாக்சி சேவைக்கு தடைகோரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் இயங்கும் ஒன்வே டாக்சி சேவையால் தனியார் கால் டாக்சி மற்றும் வாடகை வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, மாவட்ட வாடகை கார் டிரைவர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனிடையே, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம், நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினர். போலீசார் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக கூறியதால், இது குறித்து எஸ்பிக்கு போனில் பேசி விபரம் கேட்டறிந்த அமைச்சர்,  கார் டிரைவர்களின் கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்து, போராட்ட பகுதிக்கு சென்று, அங்கிருந்த டிரைவர்களிடமும் பிரச்னையை கேட்டார். இரு தரப்பினரின் கருத்துகளை கேட்டு நல்ல முடிவு அறிவிப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து அமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்து ஆரவாரம் எழுப்பினர். பின்னர்  கலைந்து சென்றனர்.

Related Stories: