வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: எம்எல்ஏ எழிலரசன் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வேகவதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வட்டம் தாயார் அம்மன் குளம் தெரு, பிள்ளையார்பாளையம் உள்பட பல பகுதிகளில் கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதையறிந்ததும், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், தண்ணீர் சூழ்ந்த பகுதிக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என விசாரித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார்.அவருடன் காஞ்சிபுரம் மாவட்ட திமுக அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் சந்துரு, சரவணன், அபுசாலி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மார்க்கண்டேயன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

More