அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 50 % காலி

கோவை, ஏப். 22: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடயை படுக்கை 50 சதவீதம் காலியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கோவையில் கொரோனா நோய்த் தொற்று தீவிரம் அடைந்து உள்ளது. இதில், நுரையீரல் தொற்றால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. இது போன்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.கடந்த சில நாள்களாக கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் ஆக்சிஜன் குழாய் இணைப்பு பொருத்தப்பட்டுள்ள படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பியது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 சதவீத ஆக்சிஜன் படுக்கை வசதிகள் காலியாகவுள்ளதாகவும், தேவையைக் காட்டிலும் ஆக்சிஜன் கூடுதலாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் 917 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், 500 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்த படுக்கைகளில் 50 சதவீத படுக்கைகள் மட்டுமே தற்போது நிரம்பியுள்ளது. 50 சதவீத படுக்கைககள் காலியாகவுள்ளன. நோயாளிகள், அறுவை சிகிச்சை அரங்குகள் உள்பட நாளொன்றிற்கு 5 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜன் தேவையுள்ளது.

 ஆனால் எங்களிடம் 13 கிலோ லிட்டர் இருப்பு வைக்கப்படும் ஆக்சிஜன் உருளை உள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பெருந்துறையில் இருந்து வந்து ஆக்சிஜன் நிரப்பப்படுகிறது. இதனால் தேவையைவிடவும் கூடுதலாக ஆக்சிஜன் உள்ளது. பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் கூறுகையில்: இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 300 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து படுக்கைகளும் நிரம்பி உள்ளது. எங்களுக்கு நாளொன்றிற்கு 3 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவை உள்ளது. ஆனால், 11 கிலோ லிட்டர் இருப்பு வைக்க கூடிய ஆக்சிஜன் உருளை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருந்துறை இருந்து வந்து 2 நாள்களுக்

கொருமுறை ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது” என்றார்.

Related Stories: