பூந்தோட்ட இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு

நாமக்கல், ஏப். 23: பூந்தோட்ட இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும், இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவிரி நீரேற்று பாசனதாரர்கள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியன், தமிழக மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:தமிழ்நாட்டில் தற்போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் விவசாயிகளுக்கு 3-ஏ பூந்தோட்ட சர்வீஸ் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டங்களில் 1 யூனிட் மின்சாரம் 80 காசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ₹4.50 விவசாயிகளிம் இருந்து மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தெரிய வருகிறது. இதனால் பூந்தோட்ட விவசாயிகளுக்கு இந்த மின் இணைப்பால் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. எனவே 3-ஏ பூந்தோட்ட இணைப்பு பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சார திட்டத்தின் கீழ் உடனடியாக இலவச மின்சாரம் வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும். பூந்தோட்டம் வைத்திருப்பவர்களும் விவசாயி தான், மற்ற சாகுபடி செய்யும் விவசாயிகளும் விவசாயி தான். எனவே ஒரு விவசாயிக்கு இலவச மின்சாரமும் மற்ற விவசாயிக்கு மின் இணைப்பிற்கு கட்டணம் வசூலிப்பதும்  எந்த விதத்திலும் நியாயமற்ற செயல் ஆகும். எனவே உடனடியாக 3-ஏ பூந்தோட்ட இணைப்பு பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கவேண்டும். வரும் காலங்களில் பூந்தோட்ட சர்வீஸ் என்ற இணைப்பை நீக்கி விட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>